இது உனக்காக சஞ்சனா
உன் சுவாசத்தை கொடுத்தாய் .
என் நெஞ்சத்தை உடைத்தாய் .
என் காதலை ஏந்தினாய் .
என் தேடலை தூண்டினாய்.
தேவைகளை புரியவைத்தாய்.
என்னை இவ்வுலகில் இருந்து மறைய வைத்தாய்.
சொற்களை வலியவைத்தாய்.
என்னை உன்னுள் ஒளியவைத்தாய்.
நண்பனை வெறுக்க வைத்தாய்.
என்னை உன்பின்னால் சுற்ற வைத்தாய்.
காதலில் கரையவைத்தாய்.
இதழை நிறையவைத்தாய்.
உயிரை உடலில் தெரிக்க வைத்தாய்.
உணர்வை என்னுள் உருகவைத்தாய்.
செல்வத்தை பூட்டிவிட்டாய்.
என் அருகே மணமகளாய் அமர்ந்துவிட்டாய். - ம.சதீஷ்