மனங்களுக்குள் மாறும் காதல்
பார்த்த உடனே காதலிக்குரான்
காகிதத்த கவிதையில நிரப்புறான்
கன்னடிச்சி செய்கை காட்டுறான்
கண்ணாடிய பார்த்து அவனா பேசுறான்
பெண்ண தேடி இவனா போகுறான்
இவனே அவளால விழகி வாழுறான்
பீச்சுல கடல போட பொண்ண தேடுறான்
தேடிய பொண்ண கர்ப்பம் ஆக்குரான்
கை கோர்த்து போன பொண்ண மறக்குறான்
நடந்த பாதையில வேற பொண்னோட நடக்குறான்
அவளும் இவனுக்கு சலிச்சவ இல்ல
முதல் பார்வையில நடிக்க ஆரமபிக்குரா
அவன தன் கை பொம்மையா நடத்தி வாழுறா
சிட்டி முழுக்க சுத்தி பாக்குரா
அவன வச்சிதான் வண்டி ஓட்டுரா
காதலு மோகத்த மனசுல வைக்குரா
பல நாள் வாழ்க்கைய மறந்து வாழுரா
உண்மையான காதல ஒதுக்கி தல்லுரா
பொய்யான காதல அனைத்து வாழுறா
கர்பத்த கடைசியா கலைக்க போகுறா
இன்பத்த தேடி மறுபடி புது பையன தேடுரா
- ம .சதீஷ்