இழந்தேன் மகிழ்ச்சியின் தொடக்கத்தை
அவள் கண்களில் காதலை கண்டேன்
என் கண்களில் கண்ணீரை கண்டால்
அவள் அழகை ரசித்தேன்
என் அழிவை ருசித்தால்
இதழோடு புன்னகையை பூட்டினேன்
என்னை உயிரோடு கல்லறையில் பூட்டினால்
என்மேல் அவள் துயில் கொள்ள ஆசைப்பட்டேன்
உயிரோடு குப்பையில் வீசப்பட்டேன்
அன்பே நான் உன்னுள் இருக்க விரும்பினேன்
ஆனால் நான் என்னை மன்னுள் ஏன் புதைத்தாய்!
இன்னும் உனக்காக உயிரே
இவ்வுடலும் உயிரும் உனக்காக
என் பாதை நீ தான்
இதழில் மின்னும் புன்னகை நீதான்
எனக்கும் மனம் உண்டு
என் மனதில் ஈரம் உண்டு
அம்மனதில் முழுதும் காதல் உண்டு
அக்காதலின் தோற்றம் நீ தான்
அன்பே பிரியாதே
என் உயிரை உடளிலிருந்து பிரிக்காதே - ம.சதீஷ்
No comments:
Post a Comment