Monday, 10 December 2012

இதயத்தில் ஒரு துடிப்பு காதல்


இதயத்தில் ஒரு துடிப்பு காதல்




கடலோடு தொட்டுசெல்லும் நீரை போல் 

என் மனதோடு விட்டுசென்றாய் காதல் வழியை.


சிற்பியின் உள்ளே முத்தின் அடக்கம் 

என் மனதின் உள்ளே உன் காதலின் இறுக்கம். 


நடுகடலில் தத்தளிக்கும் கப்பலை போல்  

உன் மனக்கடலில் தத்தளிக்கின்றேன் காதலை வைத்து. 


கரை சேர துடிக்கும் கப்பலை போல 

உன் இதழ் சேர துடிக்கிறது என் காதல். 


உன் கூந்தலால் என் உயிரை இழுத்திடு 

காதல் காட்டில் என்னை உன் மனதுள் புதைத்திடு .


சுவாசத்தை உன் நெஞ்சாக்கூட்டில் புதைத்திடு 

என் மேனியை உன் பார்வையால் பொசிக்கிடு. 


அன்பே என்னை உனக்கு தருகிறேன் 

உன் காதலுக்காக ஏழு ஜென்மமாய் காத்திருக்கிறேன். 


என் உயிரின் காதல் வழியை உன் அணைப்பில் நிறுத்திடு 

என் காதலை உனக்காக மாற்றிடு என் காதல் பூவே ! - ம.சதீஷ் 

Friday, 7 December 2012

இழந்தேன் மகிழ்ச்சியின் தொடக்கத்தை




அவள் கண்களில் காதலை கண்டேன்
என் கண்களில் கண்ணீரை கண்டால்

அவள் அழகை ரசித்தேன்
என் அழிவை ருசித்தால்

இதழோடு புன்னகையை பூட்டினேன்
என்னை உயிரோடு கல்லறையில் பூட்டினால்

என்மேல் அவள் துயில் கொள்ள ஆசைப்பட்டேன்
உயிரோடு குப்பையில் வீசப்பட்டேன்

அன்பே நான் உன்னுள் இருக்க விரும்பினேன்
ஆனால் நான்  என்னை மன்னுள் ஏன் புதைத்தாய்!

இன்னும் உனக்காக உயிரே
இவ்வுடலும் உயிரும் உனக்காக

என் பாதை நீ தான்
இதழில் மின்னும் புன்னகை நீதான்

எனக்கும் மனம் உண்டு
என் மனதில் ஈரம் உண்டு

அம்மனதில் முழுதும் காதல் உண்டு
அக்காதலின் தோற்றம் நீ தான்

அன்பே பிரியாதே
என் உயிரை உடளிலிருந்து பிரிக்காதே - ம.சதீஷ்

Tuesday, 4 December 2012

புகை உன் பகை 



புகை விடுகிறாய் நிகழ் காலத்தில்

உன் பை தொகை இழக்கிறாய்

எதிர்காலத்தில்.


புகையும் நீயும் ஒன்று என்றாய் அன்று

நோயும் நீயும் ஒன்றாய் ஆனாய் இன்று.


பலவகை புகை பொருட்களை வாங்கி புகை விடுகிறாய்

பலசிறப்புகள் நிறைந்த உன் உள் உறுப்புகளை நீ

இழக்கிறாய்.


அன்று புகை விட்டு நகைத்தாய்

இன்று உன் உறுப்புகள் இழந்து அழுகிறாய் . -ம.சதீஷ் 
போதை உன் அழிவு 




போதை பொருட்களை உல் வாங்குகிறாய்

பல மேதைகள் சொற்களை வெளியேற்றுகிறாய்.

நீ சொல்வதை செய்யும் மனம் வேண்டுமா

மனம் சொல்வதை செய்யும் அடிமையாக இருக்க வேண்டுமா.

உன் வாழ்கை முழுமையானது  என விதி

நிச்சயித்தது

ஆனால் உன் வாழ்க்கை பாதியென உன் மதி

கட்டளையிட்டது!

போதை வழி சென்றாய்

நல் வாழ்க்கை பாதையை மறந்தாய் !!!!! - ம.சதீஷ் 
தாயே உன் கடவுள் 




பத்து மாதம் உன்னை

தன்

வயிற்றில் சுமந்தால்.

உன் மனைவியை  தன்

மகளாக பேனி சுமந்தால்.

ஆனால்

உன் குழந்தைகளை சுமந்து கொஞ்சும்

நேரத்தில்

அவளையே சுமையென கருதி

ஏன் முதியோர் இல்லத்தில் சேர்த்தாய் - ம.சதீஷ் 
உன் மனமே ஏமன் 




வேகமாக செல்லாதே வாகனத்தில் 

விபத்தால் வாகனத்தின் சக்கரம் வளைந்தால் 

அதை தட்டி நேராக நிறுத்தலாம்.

ஆனால் 

உன் முதுகு எலும்பு முறிந்தால் 

அதை கட்டி நேராக நிறுத்த 

இயலுமோ!

                                                  -ம.சதீஷ்