Tuesday, 4 December 2012

புகை உன் பகை 



புகை விடுகிறாய் நிகழ் காலத்தில்

உன் பை தொகை இழக்கிறாய்

எதிர்காலத்தில்.


புகையும் நீயும் ஒன்று என்றாய் அன்று

நோயும் நீயும் ஒன்றாய் ஆனாய் இன்று.


பலவகை புகை பொருட்களை வாங்கி புகை விடுகிறாய்

பலசிறப்புகள் நிறைந்த உன் உள் உறுப்புகளை நீ

இழக்கிறாய்.


அன்று புகை விட்டு நகைத்தாய்

இன்று உன் உறுப்புகள் இழந்து அழுகிறாய் . -ம.சதீஷ் 

No comments:

Post a Comment