Wednesday, 28 November 2012
Tuesday, 20 November 2012
காதல் மேகம்
காதல் நீர் கனத்தால்
தள்ளாடும் மேகம் நான்
உலவுகிறேன் பார் எங்கும்
மழையை காதலாய் உன்மேல் பொழிய
பொழிவது மழையில்லை
என்
உயிர் என்று அரிந்துக்கொள்
நனைவாயா காதலில்
அல்லது
விடுவாயா என் காதல் துளிகளை
மன்னில் மோதலில்
மோதிய துளிகள் தெரித்தாலும்
உன் காலடி மேனியில்
வாழ்வேன் சிறு நொடியாவது
உன் பூக்கரங்களால் என்னை
துடைக்கும் வரை !!!!! - ம.சதீஷ்
யாவும் நீயே
மரமாக நீ இருந்தால்
உன்னை
தாங்கும் வேறாக நான் இருப்பேன்
அலையாக நீ இருந்தால்
உன்னை
அனைக்கும் கரையாக நான் இருப்பேன்
மேகமாக நீ இருந்தால்
நீ சுதந்திரமாக சுற்றி திரிய
வானமாக நான் இருப்பேன்
பூவாக நீ இருந்தால்
உன்னை
உரசிச்செல்லும் காற்றாக நான் இருப்பேன்
புயலாக நீ இருந்தால்
உன்னுள்
அடங்கும் மண்ணாக நான் இருப்பேன்
சிற்பம் நீ என்றால்
உன்னை
செதுக்கும் உழியாக நான் இருப்பேன்
கவிதை நீ என்றால்
உன்னை
அலங்கரிக்கும் வார்த்தையாக நான் இருப்பேன்
உடல் நீ என்றால்
உன் உயிர் நானாவேன்
என் மனைவி நீ என்றால்
உன்
மகிழ்ச்சி நானாவேன் - ம.சதீஷ்
Thursday, 8 November 2012
காதலின் அழகே !!!!!!!!
ஒரு சிறு புன்னகையால்
என்
மனதில் காதல் நகையை
அணியவைத்தாய்.
சிறு விழிகளின் பார்வை
காதல்
மொழியை படிக்க தூண்டிற்று.
சிறு விரல்களின் அசைவுகள்
என்
திசை மாற்றியது .
வீசிய பார்வையால்
என்
நெஞ்சத்தை பிளந்தாய் .
பேசிய வார்த்தையால்
என்
உயிரையும் இழுத்தாய் .
நான்
ஒரு திசையாக வேண்டும் .
உன்
இதழ்கள் வழியாக சிந்தும்
கவிதைகள் எனக்கு
இசையாக வேண்டும் .
உன் முகம் செந்தாமரையின் மலர்ச்சி
என் மனதில் காதல் உணர்ச்சி .
காதலின் ஆழத்தை உணர்த்திட
என்னை
உன் மனதில் புதைத்திடு
காதல் விதையாக .
கரு கருநிற மேகத்தில்
கரைந்திடுவேனோ .
செந்நிற இதழால்
சிவந்திடுவேனோ.
கரு வெள்ளை பூக்களில்
கலந்திடுவேனோ.
- ம.சதீஷ்
என் சுவாசம்
பூட்டிய இதழை திறந்திடு
காதல் நகையை வெளியேற்று
கண்களின் ஓரம் காதல் ஈரம்
உன்னை மணம் முடிக்கும் நோக்கமே எந்நேரமும்
இருவரின் தூரத்தை குறைத்திடு
என் இதழோடு உன் இதழை நிறைத்திடு
சுவாசக்காற்று ஒன்றாகட்டும்
பேசும் பேச்சு மனமாகட்டும்
மூச்சின் ஜுவாலை வழியே வெப்பம்
சொப்பனங்கள் எல்லாம் நடந்தேறட்டும்
அற்ப ஆசைகள் இருவரையும் அலங்கரிக்கட்டும்
வானம் உடுத்திய மேகம் போல்
என்னை உடுத்திவிடு மேனியெங்கும் - ம.சதீஷ்
Sunday, 4 November 2012
MY SONG
ஏன்டி என்ன torture பன்ற
கடை பொம்மை நீயா தெரியுது
மனசுல காதல் உருகுது
எந்த பொண்ண பார்த்தாலும்
உன் நினைப்பு
மனசுல காதல் நெருப்பு
ஏன்டி உயிரோட எரிக்குற அந்த
நெருப்புல ஏன் நீ குளிர் காயுற
உன்னை பார்த்தாலே நாக்கு சுழலுது
தலையும் கிரு கிறுன்னு சுத்துது
உன்னை பார்த்தாலே படபடப்ப இருக்கு
எனக்கு புடிச்சிருக்கு காதல் கிறுக்கு
காதல் ஆனியும் மனசுல அடிச்சா
இந்த சூனியத்தை எவன் செஞ்சான்
மனசு ஆடுது பேயாட்டம்
உன் பாதைய தேடுது வெறியாட்டம் - ம.சதீஷ்
Saturday, 3 November 2012
Subscribe to:
Posts (Atom)