Tuesday, 20 November 2012


யாவும் நீயே 



மரமாக நீ இருந்தால் 
உன்னை 
தாங்கும் வேறாக நான் இருப்பேன் 

அலையாக நீ இருந்தால் 
உன்னை 
அனைக்கும் கரையாக நான் இருப்பேன் 

மேகமாக நீ இருந்தால் 
நீ சுதந்திரமாக சுற்றி திரிய 
வானமாக நான் இருப்பேன் 

பூவாக நீ இருந்தால் 
உன்னை 
உரசிச்செல்லும் காற்றாக நான் இருப்பேன் 

புயலாக நீ இருந்தால் 
உன்னுள் 
அடங்கும் மண்ணாக நான் இருப்பேன் 

சிற்பம் நீ என்றால் 
உன்னை 
செதுக்கும் உழியாக நான் இருப்பேன் 

கவிதை நீ என்றால் 
உன்னை 
அலங்கரிக்கும் வார்த்தையாக நான் இருப்பேன் 

உடல் நீ என்றால் 
உன் உயிர் நானாவேன் 

என் மனைவி நீ என்றால் 
உன் 
மகிழ்ச்சி நானாவேன்  - ம.சதீஷ் 

No comments:

Post a Comment