Thursday, 8 November 2012

காதலின் அழகே !!!!!!!!



ஒரு சிறு புன்னகையால் 
என் 
மனதில் காதல் நகையை 
அணியவைத்தாய். 

சிறு விழிகளின் பார்வை 
காதல் 
மொழியை படிக்க தூண்டிற்று. 

சிறு விரல்களின் அசைவுகள் 
என் 
திசை மாற்றியது .

வீசிய பார்வையால் 
என் 
நெஞ்சத்தை பிளந்தாய் .

பேசிய வார்த்தையால் 
என் 
உயிரையும் இழுத்தாய் .

நான் 
ஒரு திசையாக வேண்டும் .

உன் 
இதழ்கள் வழியாக சிந்தும் 
கவிதைகள் எனக்கு 
இசையாக வேண்டும் .

உன் முகம் செந்தாமரையின் மலர்ச்சி 
என் மனதில் காதல் உணர்ச்சி .

காதலின் ஆழத்தை  உணர்த்திட 
என்னை 
உன் மனதில்  புதைத்திடு 
காதல் விதையாக .

 கரு கருநிற  மேகத்தில் 
கரைந்திடுவேனோ .

செந்நிற இதழால் 
சிவந்திடுவேனோ.

கரு வெள்ளை பூக்களில் 
கலந்திடுவேனோ.

- ம.சதீஷ் 

1 comment: