இதயத்தில் ஒரு துடிப்பு காதல்
கடலோடு தொட்டுசெல்லும் நீரை போல்
என் மனதோடு விட்டுசென்றாய் காதல் வழியை.
சிற்பியின் உள்ளே முத்தின் அடக்கம்
என் மனதின் உள்ளே உன் காதலின் இறுக்கம்.
நடுகடலில் தத்தளிக்கும் கப்பலை போல்
உன் மனக்கடலில் தத்தளிக்கின்றேன் காதலை வைத்து.
கரை சேர துடிக்கும் கப்பலை போல
உன் இதழ் சேர துடிக்கிறது என் காதல்.
உன் கூந்தலால் என் உயிரை இழுத்திடு
காதல் காட்டில் என்னை உன் மனதுள் புதைத்திடு .
சுவாசத்தை உன் நெஞ்சாக்கூட்டில் புதைத்திடு
என் மேனியை உன் பார்வையால் பொசிக்கிடு.
அன்பே என்னை உனக்கு தருகிறேன்
உன் காதலுக்காக ஏழு ஜென்மமாய் காத்திருக்கிறேன்.
என் உயிரின் காதல் வழியை உன் அணைப்பில் நிறுத்திடு
என் காதலை உனக்காக மாற்றிடு என் காதல் பூவே ! - ம.சதீஷ்